
சமீபத்தில், திருச்சியில் திறக்கப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சு.திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு தலைவரும், சிவாஜி சமூகநலப் பேரவை தலைவருமான கே.சந்திரசேகரன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுமான ரெக்ஸ், கோவிந்தராஜன், கலைப்பிரிவு மாநில துணைத் தலைவர் பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோ, கலைப்பிரிவு மாவட்டத் தலைவர் அருள், காங்கிரஸ் சிறுபான்மை துறை பேட்ரிக் ராஜ்குமார், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அர்ஜுன், மாவட்ட சிவாஜி பேரவை தலைவர் சோனா ராமநாதன், மாவட்ட சிவாஜி மன்றத் தலைவர் உறந்தை செல்வம், ஆர்.சி.ராஜா , பீமநகர் நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருநாவுக்கரசு, திரண்டிருந்த சிவாஜி ரசிகர்களிடம் , நடிகர் திலகத்தின் பெருமைகளையும், அவருடன் தமக்கிருந்த நட்பையும் விவரித்து மகிழ்ந்தார்.