meet

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தேர்தல் கூட்டணி குறித்து பாஜக அமைச்சர் பியூஸ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று நடத்தியபேச்சு வார்த்தையில் இழுபறி நீடிக்கின்ற நிலையில் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அவரது இல்லத்தில் தற்போது ஆலோசனை கூட்டம்நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னாள் தமிழககாங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று நேரில்சந்தித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் இந்த சந்திப்பானாது உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கான சந்திப்பு என கூறப்படுகிறது. அண்மைக்காலமாக டெல்லி பயணம், கூட்டணி பேச்சுவார்த்தை என பிசியாக இருந்ததால் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பிய விஜயகாந்த்தை நலம் விசாரிக்க முடியவில்லை. எனவே தற்போது அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க அவரது இல்லத்திற்கு சென்று விஜகாந்த்தை சந்தித்தார்திருநாவுக்கரசர்.