Advertisment

 திருநாவுக்கரசர் உதவியாளர் மர்மச்சாவு

thi

புதுக்கோட்டை சமத்துவுரம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுகுமாரன்(50). இவர் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராக இருந்து வந்தார். வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் திருநாவுக்கரசரின் பிறந்த நாளை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்துவிட்டு மதியம் 1 மணிக்கு வீட்டிற்கு வந்து தூங்க சென்றுள்ளார்.

Advertisment

இந்நிலையில் சனிக்கிழமை சுகுமாறன் வீட்டில் இருந்து லேசான துர்நாற்றம் வீசியது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவை திறந்து பார்த்த போது சுகுமாரன் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. உடனே திருக்கோகர்ணம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

திருநாவுக்கரசரின் உதவியாளர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக் கிழமை நடக்கும் சுகுமாறனின் இறுதிச் சடங்கில் திருநாவுக்கரசர் கலந்து கொள்கிறார்.

Assistant Thirunavukarakar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe