Skip to main content

 திருநாவுக்கரசர் உதவியாளர் மர்மச்சாவு

Published on 15/07/2018 | Edited on 15/07/2018
thi

 

புதுக்கோட்டை சமத்துவுரம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுகுமாரன்(50).  இவர் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராக இருந்து வந்தார்.  வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் திருநாவுக்கரசரின் பிறந்த நாளை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்துவிட்டு  மதியம் 1 மணிக்கு வீட்டிற்கு  வந்து தூங்க சென்றுள்ளார்.
 

இந்நிலையில் சனிக்கிழமை  சுகுமாறன் வீட்டில் இருந்து லேசான துர்நாற்றம் வீசியது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவை திறந்து பார்த்த போது சுகுமாரன் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. உடனே திருக்கோகர்ணம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
   திருநாவுக்கரசரின் உதவியாளர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக் கிழமை நடக்கும் சுகுமாறனின் இறுதிச் சடங்கில் திருநாவுக்கரசர் கலந்து கொள்கிறார்.
    
 

சார்ந்த செய்திகள்

Next Story

சக ஊழியரிடம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய கண்காணிப்பாளர்

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

tenkasi water drainage department superintendent bribe incident 

 

தென்காசி குடிநீர் வடிகால் வாரியத்தின் திட்டம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட அலுவலகம் குற்றாலத்தை அடுத்த குடியிருப்பு பகுதியில் இயங்கி வருகிறது. இதன் அலுவலக பராமரிப்பு பணிகளின் உதவியாளராக ராமசுப்பிரமணியம் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

 

இந்நிலையில் ராமசுப்பிரமணியனுக்கு நிதிக்குழு அறிவித்த சம்பள உயர்வு நிலுவைத் தொகையான 3 லட்சத்து 93 ஆயிரத்து 700 ரூபாயை பெறுவதற்காக விண்ணப்பித்திருக்கிறார். இதே அலுவலகத்தின் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் சீனிவாசன் என்பவர் ராமசுப்பிரமணியனின் சம்பள உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவதற்கு 10 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டிருக்கிறாராம். இதனால் மனமுடைந்து போன ராமசுப்பிரமணியன் தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்திருக்கிறார். இதனையடுத்து தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. மதியழகன், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட போலீசார் திட்டமிட்டு நேற்றைய தினம் ராமசுப்பிரமணியத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனுப்பி உள்ளனர்.

 

இதன்படி ராமசுப்பிரமணியன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அலுவலகத்திலிருந்த சீனிவாசனிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டீம் அதனைக் கண்காணித்து பணத்துடன் அவரை கைது செய்தனர். 

 

 

Next Story

எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக இருந்தவர் மீது மீண்டும் மோசடி புகார்! 

Published on 30/07/2022 | Edited on 30/07/2022

 

Another fraud complaint against Edappadi Palaniswami's assistant!

 

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக இருந்தவர் மீது மீண்டும் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

 

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்துள்ள நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, அவருக்கு நேர்முக உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பல கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, மணியும், அவரது கூட்டாளியுமான செல்வக்குமாரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தனர். 

 

இந்த நிலையில், சேலத்தில் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள், மணி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வருகின்றனர். அ.தி.மு.க. நிர்வாகியான கிஷோர் என்பவர், மாவட்ட காவல்துறை துணை ஆணையர் மாடசாமியிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இது குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.