
சனி பகவான் கோவிலுக்கு பெயர்போன திருநள்ளாறில் அர்ச்சகர் வீட்டில் தங்கியிருந்த இரண்டு நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனி பகவான் கோவில். திருநள்ளாறு பெருமாள் கோவில் தெருவில் ரோகிணி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநள்ளாறு கோவிலில் 40 ஆண்டுகளாக அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார். கடந்த 21ஆம் தேதி அர்ச்சகர் ரோகிணியிடத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி வெங்கடேஷ் என்ற 50 வயது நபரும், 50 வயது பெண்மணியும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
நீங்கள் பூஜை செய்துதான் கடந்த ஆண்டு எங்களுடைய மகளுக்கு திருமணம் நடைபெற்றது என்ற இருவர், இந்த வருடம் தன் மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும் அதற்காக பரிகார பூஜைகளை செய்து தாருங்கள் எனக் கேட்டுள்ளனர். இதனை நம்பிய ரோகிணி அவர்களை நாளை காலை வரும்படி தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் இங்கு தங்க அறை கிடைக்கவில்லை என்பதால் உங்கள் வீட்டில் நாங்கள் தங்கிக் கொள்கிறோம். நாளை காலை பூஜை முடித்துக் கொண்டு நாங்கள் சென்று விடுவோம் என தெரிவித்தனர்.
அதனை நம்பி அர்ச்சகர் அவர்கள் இருவரையும் வீட்டில் தங்க வைத்துள்ளார். ஆனால் அடுத்த நாள் காலை எழுந்த பொழுது வீட்டில் இருவரும் இல்லாததைக் கண்டு அதிர்ந்துள்ளார். அப்பொழுது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை 20 பவுன் நகை மற்றும் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கம், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக திருநள்ளாறு காவல் நிலையத்தில் அர்ச்சகர் புகார் அளித்துள்ளார். அவருடைய புகாரை அடுத்து போலீசார் இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)