Advertisment

திருமுருகன்காந்தி உயிருக்கு ஆபத்து- வைகோ!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில்,

Advertisment

vaiko

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கோடிக்கணக்கான தமிழர்கள் நெஞ்சில்காரணமான இருந்தராஜாதான் குற்றவாளி. அம்பை எறிந்த ராஜா பன்வாரிலால் புரோகித்தை நேரில் போய் சந்திக்கிறார். காவல்துறை பாதுகாப்போடு மேடைகளில் பேசுகிறார்.ஒப்புக்கு வழக்குபதிவு செய்திருக்கிறோம் என்று சொல்லுகிறார்கள். எனவேதான் பெரியார் சிலையை உடைக்கவேண்டும் என்று சொன்னவர்அருகேயே போவதில்லை.மத்திய அரசுக்கு கொத்தடிமை சேவை செய்கிற அரசாக இந்த தமிழக அரசு இருக்கிறது.

Advertisment

இந்தியாவின் ஜனநாயகத்திற்கு, மதச்சார்பின்மைக்கு, பன்முகத்தன்மைக்கு ஆபத்து இருக்கிறது. திமுகவை அழிக்க நினைக்கிறார்கள்.நான் திராவிட இயக்கத்திலுருந்து வார்ப்பிக்கப்பட்டு 54 ஆண்டுகள் அதிலே ஊறி வளர்ந்தவன். பெரியார், அண்ணா அவர்கள் ஊட்டி வளர்த்த உணர்விலே வளர்ந்தவன். தமிழீழ உணர்வும் திராவிட இயக்கத்தால்தான் ஏற்பட்டது. ஆனால் அந்த திராவிட இயக்கத்தையே அழித்துவிட இந்துத்துவா சக்திகள் முயல்வதால் அதை பாதுகாக்கவேண்டும்.

அந்தவகையில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி கருத்துக்களை சொல்லிவிட்டு வந்த வேளையில் அவரை கைது செய்து 30 வழக்குகள் போட்டுள்ளனர். நான் மிகவும் கவலையோடும்,பயத்தோடும்இருக்கிறேன் அவருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் எனக்கூறினார்.

mdmk thirumurugan gandhi vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe