May 18

மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஜெ எம் 3 நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

Advertisment

இவர் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி குமரெட்டியார்புரம் கிராமத்தில் நடத்த போராட்டத்தில் திருமுருகன் காந்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசி கலவரத்தை தூண்டும் விதமாக நடந்து கொண்டதாக அவர் மீது தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செயப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராக அவரை போலீசார் அழைத்து வந்தனர்.

Advertisment