Advertisment

மக்களுக்காக குரல் கொடுப்பவர்களின் குரல்வளைகள் மட்டுமே நெறிக்கப்படுகிறது-பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தபின் திருமுருகன் காந்தி பேச்சு!

thirumuru

இன்று மாலை வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட்ட பின் வேலூரிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை வரவேற்க 17 இயக்கத்தின் உறுப்பினர்கள் அங்கு திரண்டனர்.அதன்பின் செய்தியாளர்களைசந்தித்த அவர்,

Advertisment

thirumu

தொடர்ச்சியாக பொய் வழக்குகளை போட்டு எதிர் குரல் கொடுப்பவர்களை எல்லாம் பாஜக அரசின் உத்தரவுக்கு இணங்க எடப்பாடி அரசு கைது செய்து ஒடுக்கி வருகிறது. ஜனநாயகத்தினுடைய அடிப்படை உரிமைகளில் முக்கிய ஒன்றான கருத்துரிமையும்தற்போதுமறுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அரசியல் சாசனம் சார்ந்த ஆட்சி நடைபெறவில்லை. அரசியல் சாசனத்திற்கு விரோதமான ஆட்சி நடைபெற்று வருகிறது. தவறு செய்யும் வலதுசாரிகளை கைது செய்யாத அரசு மக்களுக்கான குரல் கொடுப்பவர்களின் குரல்வளைகளை மட்டும் முதலில்நெறிக்கிறதுஎன்றார்.

Advertisment
release may17 thirumurugan gandhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe