மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விவாதித்து, அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து முடிவெடுப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணு ஒருங்கிணைப்பில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை நிருபர்கள் சங்க கட்டிடத்தில் 16/12/2019 அன்று நடைபெற்றது.

Advertisment

Thirumurugan Gandhi

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது 40 க்கும் மேற்பட்ட வழக்குகளை ஏவப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும், திருமுருகன் காந்தி மீதான அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும், அவர் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வலியுறுத்தி முதலமைச்சர், ஆளுநர், DGP, உள்துறை செயலர், உள்ளிட்டோரை முதல்கட்டமாக அனைத்துக் கட்சி தலைவர்கள் சந்திப்பது என முடிவு செய்திருப்பதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisment