Advertisment

அமிர்தாவை சந்தித்து ஆறுதல் கூறிய திருமாவளவன்

am

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மேரியாலகூடா என்னுமிடத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 14ஆம் தேதி அன்று பிரணாய் என்ற தலித் இளைஞர் அவருடைய மனைவி மற்றும் தாய் ஆகியோரின் கண் எதிரிலேயே கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய மனைவி அமிர்தவர்சினி தலித் அல்லாத சமூகத்தைச் சார்ந்தவர். அமிர்தாவும் பிரணாயும் ஒருவரைஒருவர் விரும்பி காதல் திருமணம் செய்துகொண்டதற்காக அமிர்தாவின் தந்தை மாருதிராவ் கூலி கும்பலை வைத்து இப்படுகொலையை செய்துள்ளார்.

Advertisment

amn

இந்த ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட பிரணாயின் மனைவி அமிருதாவையும் அவரது பெற்றோரையும் இன்று மாலை 6 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் கட்சியின் சார்பில் ரூபாய் ஐம்பதாயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

Advertisment

ஐந்து மாத கர்பிணியாக இருக்கின்ற அமிருதா தன்னுடைய கணவர் கொல்லப்பட்டதற்கு நீதி கிடைக்கும் வரையில் போராடபோவதாகவும், சாதி என்ற விசயத்திற்காக இவ்வளவு பெரிய கொடுமையை செய்திருக்கிறார்கள் என்றும், இதுவே கடைசியாக இருக்க வேண்டும், இத்தகைய ஆணவக் கொலைகளை தடுக்க பிரணாயின் பெயரிலேயே சட்டம் இயற்ற வேண்டும் என்றும் உறுதியாக நின்று போராட இருப்பதாகவும் சந்திப்பின் போது தொல்.திருமாவளவன் அவர்களிடம் கூறினார்.

தமிழகத்தில் கவுசல்யா சங்கர் போராடி வெற்றிகண்டதை போல நீயும் துணிச்சலாக போராடி வெற்றி பெற வேண்டும் என்று திருமாவளவன் அமிர்தாவை ஊக்கமூட்டினார். பிரணாய் பெற்றோரிடம் அமிர்தாவை உங்கள் மகளாக ஏற்று அவரை பாதுகாக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.

amritha Thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe