Advertisment

உச்சநீதிமன்றத் தீர்ப்பு - திருமாவளவன் வரவேற்பு

Thirumavalavan welcome's Supreme Court Verdict

தென்னக ரயில்வேயில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று திருச்சி அரிஸ்டோர் ரவுண்டானத்தில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கல்யாணசுந்தரம், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வைத்தியலிங்கம், செல்வராஜ் மற்றும் தென்னக ரயில்வேயின் முதன்மை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

கூட்டத்திற்கு பின்னர்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தென்னக ரயில்வேயின் முன்னணி அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே வழக்கமான கலந்தாய்வு கூட்டம் இன்று(16ம் தேதி) திருச்சி கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், நானும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று இரண்டு தொகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் வலியுறுத்திருக்கிறோம். குறிப்பாக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நீண்ட காலமாக மக்கள் முன்வைத்து வரக்கூடிய கோரிக்கை ஜனசதாப்தி ரயிலும், மைசூர் விரைவு வண்டியும் மயிலாடுதுறை வரையில் வந்து போகிறது, அவை இரண்டையும் சிதம்பரம் வழியாக கடலூர் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொது மேலாளர் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

Advertisment

அவற்றை பரிசீலித்து ரயிலுக்கான நேரம் தொடர்பான சிக்கல்களை எல்லாம் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொது மேலாளர் கருத்து தெரிவித்திருக்கிறார். மீண்டும் கோட்ட மேலாளர் அலுவலகத்திற்கு சென்று, பொது மேலாளரை அங்கேயும் சந்தித்து இந்த கோரிக்கைகள் தொடர்பான பல்வேறு விளக்கங்களை முன் வைத்தோம். அவர் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறார். அடுத்து மும்பையில் இருந்து திருநெல்வேலி வரையில் விழுப்புரம் மதுரை வழியாக ரயில் விட வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கையை தென்னக ரயில்வே பொது மேலாளரின் பார்வைக்கு கொண்டு சென்றோம். சென்னை வரையில் வரக்கூடிய விரைவு வண்டியை விழுப்புரம் மதுரை வழியாக திருநெல்வேலி வரையில் கொண்டு செல்ல வேண்டும் என்கிற கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறோம். அதனை செய்வதற்கு என்ன சாத்திய கூறுகள் இருக்கும் என்பதை கண்டறிந்து அதன் அடிப்படையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் விடுதலை சிறுத்தைகளையும் இணைத்துக் கொண்டோம். அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவை தாக்கல் செய்திருந்தோம். பல கட்சிகள் வழக்கு தொடுத்திருந்த நிலையில் விடுதலை சிறுத்தைகளும் அதே வேண்டுகோளை முன்வைத்து வழக்கு தொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அரசியல் கட்சிகள் பெரு நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நிதியை பெறக்கூடிய தேர்தல் பத்திரம் செல்லாது, நடைமுறையில் இருக்காது என தீர்ப்பு வந்திருக்கிறது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி மனப்பூர்வமாக வரவேற்கிறது. இதனால் அரசியல் அமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

பா.ஜ.க. அளவுக்கு மற்ற கட்சிகள் பெரிய அளவுக்கு பெரிய நிறுவனங்களிடமிருந்து நிதிகள் பெறவில்லை. பா.ஜ.க. தேர்தல் பத்திரங்கள் மூலம் வசூலித்திருக்கிற தொகை 6,600 கோடி என்று தெரியவருகிறது. பெரிய நிதியை திரட்டி இருக்கிற ஒரே கட்சி பா.ஜ.க. இந்தத் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரிய, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தேர்தல் நிதியை யார் திரட்டி இருந்தாலும் அது ஏற்புடையது அல்ல” என தெரிவித்தார்.

vck Thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe