விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனை இழிவுபடுத்தும் விதமாக ஓவியர் வர்மா என்பவர் ஓவியம் ஒன்றை வரைந்து வெளியிட்டார். இதற்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
ஓவியர் வர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவெண்ணெய்நல்லூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆமா.இளவரசு திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பெயரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் விசாரணை செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பலராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வர்மாவைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.