



Published on 31/10/2020 | Edited on 31/10/2020
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக அவதூறு பரப்பும் பாஜக உள்ளிட்ட சனாதன அமைப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதாகைகள் கொண்டும் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.