Advertisment

“பாவலரின் சகோ'க்கள்; பரிவார்களின் பலிஆடுகளா?” - திருமாவளவன்

Thirumavalavan tweet aboun ilayaraja

‘அம்பேத்கர் & மோடி’ எனும் தலைப்பில் வெளிவந்துள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரையில் அம்பேத்கரோடு, பிரதமர் மோடியை ஒப்பிட்டிருந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அவரின் சகோதரர் கங்கை அமரன், "அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என இளையராஜா கூறினார். தனக்கு எதிரான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதாகவும், என்னிடம் இளையராஜா கூறினார்” என்று தெரிவித்தார். இதன் பிறகு இந்த விவகாரம் இன்னும் பரபரப்பானது.

Advertisment

இந்நிலையில், சமீபத்தில் கங்கை அமரன் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் கொடுத்தார். அதில் மிகவும், ஆவேசமாகவும், ஒருமையிலும் பேசினார். இது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

Advertisment

அதில் அவர்;

“ஒப்பீடு செய்வதில்

இருவகை உண்டு.

1.நேர்மறை ஒப்பீடு 2.எதிர்மறை ஒப்பீடு

கரும்பு இனிக்கும் ;

கனிகள் இனிக்கும் -

இது நேர்மறை

கரும்பு இனிக்கும் ;

வேம்பு கசக்கும் -

இது எதிர்மறை

அம்பேத்கர் ; பெரியார் -

இது நேர்மறை.

அம்பேத்கர் ; மோடி-

இது எதிர்மறை.

அம்பேத்கரும் மோடியும்

எதிர் எதிர் துருவங்கள்.

எனவே இருவரையும் நேர்மறையாக ஒப்பிட முடியாது. அம்பேத்கர் இருந்தால் மோடியைப் பாராட்டுவார் என்பது அம்பேத்கரைச் சங்கிமயப்படுத்தும் சனாதன முயற்சி. முழுமையாய் அவரை விழுங்கத் துடிக்கும் சங்பரிவார் கும்பலின் சதிச்செயல்.

பாவலரின் சகோ'க்கள்

பரிவார்களின் பலிஆடுகளா?” என்று பதிவிட்டுள்ளார்.

ilayaraja Thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe