Thirumavalavan  SAID Government is the judgment given by the people

பழனியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. சென்றிருந்தார். முன்னதாக பழனி முருகன் கோயிலுக்குச் சென்று திருமாவளவன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் சென்று தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவசமாதியில் வணங்கினார். திருமாவளவனுக்கு பழனி போக ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்று பிரசாதங்களை வழங்கினார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், “ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பு; என்றைக்கு தமிழக மக்கள் விடுதலை சிறுத்தை கட்சி மீது நம்பிக்கை வைக்கிறார்களோ அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பார்கள், ஆதாவ் அர்ஜுனா அவருடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார் ஆட்சி அதிகாரம் என்பது உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் மக்கள் அளிக்கும் அங்கீகாரம்.” என்றார்.

Thirumavalavan  SAID Government is the judgment given by the people

Advertisment

மேலும் அன்புமணி ராமதாஸ் ரேஷன் அரிசி கடத்தப்படுவது சம்பந்தமாகத் தெரிவித்துள்ள கருத்திற்குப் பதில் அளித்த திருமாவளவன்,அன்புமணி ராமதாஸ் எதிர்க்கட்சி என்ற வகையில் விமர்சனம் செய்து உள்ளாரா? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்துத் தெரிவித்துள்ளார் என்பது தெரியவில்லை என்றும், ரேஷன் அரிசி கடத்தப்படுவது சம்பந்தமாக ஆதாரங்கள் இருப்பின், அதனைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஓசூரில் வழக்கறிஞர் படுகொலை மற்றும் ஆசிரியை படுகொலை சம்பந்தமாகக் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த திருமாவளவன், எதிர்பாராமல் நடந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. வருங்காலத்தில் இதுபோன்ற துயர் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “பழனியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தகுதியான ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நீதிமன்ற ஆணை என்பதை காரணம் காட்டி பழனி மலை அடிவாரத்தில் வியா பாரிகள் பாதிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது, பழனி மேற்கு ரத வீதியில் அருந்ததியர் சமூகத்திற்குச் சொந்தமான மடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். பேட்டியின் போது மாவட்டம் நகரம் ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருந் திரளாகக் கலந்து கொண்டனர்