
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை அவரதுஇல்லத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசினார். அப்போது தொல்.திருமாவளவன் தனது புத்தாண்டு வாழ்த்துகளைஅவருக்குத் தெரிவித்துக்கொண்டார்.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன்,"தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு கடந்த இரண்டு வருடமாக இலவசக்கல்வியை வழங்கிவரும் முதலமைச்சருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தேன். வரும் கல்வியாண்டில் ஓ.பி.சி. மாணவர்களுக்கும் இலவச கல்வியை வழங்க வலியுறுத்தினேன். தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)