புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநரும், தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி (79) நேற்று (18.08.2021) உடல்நலக்குறைவால் காலமானார். தெலங்கானா ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த அவரது தாயார், உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதி ஊர்வலம், இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினர் இரங்கலையும், நேரில் அஞ்சலியும் செலுத்தினர். இந்நிலையில் இன்று விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/th-4_9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/th-3_3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/th-1_11.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/th_9.jpg)