'பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது' என்று தமிழக டி.ஜி.பிதிரிபாதியிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தொல்.திருமாவளவன், "வன்முறையை உருவாக்கும் வகையில் பல்வேறு செயல்பாடுகளில் பா.ஜ.கஈடுபட்டு வருகிறது. மனு தர்மம் என்ன சொல்கிறதோ, அதைத்தான் நான் சொன்னேன். சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசிவரும் பா.ஜ.கமீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் மீது புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே, வேல் யாத்திரைக்கு அனுமதி கேட்டு பா.ஜ.க.வினர் சென்னை டி.ஜி.பிஅலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.