thirumavalavan mp dmk party mk stalin

சமூக வலைதளங்களில் பெண்களைக் குறித்து அவதூறாகப் பேசியதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள, தி.மு.க தலைவர்மு.க.ஸ்டாலின், "திருமாவளவன் மீது காவல் துறையினர் பதிந்துள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. தலைவருமானமு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது காவல்துறை பதிந்துள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, திருமாவளவன் மீது வழக்குப் பதிந்தது கண்டிக்கத்தக்கது. விழிப்புணர்ச்சிக்காக பெரியார், அம்பேத்கர் கூறியதை எடுத்துக் கூறி வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைத்துள்ளார். திருமாவளவன் பேசியதைதிரித்து, சமூக வலைதளங்களில் பரப்பி வன்முறையைத் தூண்ட மதவெறியர்கள் முயற்சி செய்கின்றனர். தி.மு.க. கூட்டணியில் கலகம் விளைவிக்க வாய்ப்பிளந்து நிற்கும் மதவெறியர்களின் ஆசை நிச்சயம் நிறைவேறாது' எனக் குறிப்பிட்டுள்ளார்.