Skip to main content

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்... திருமா, ஜவாஹிருல்லா, உதயநிதி உள்ளிட்டோர் ஆதரவு! 

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

Thirumavalavan, Jawaharlal Nehru, Udayanithi Stalin among others support Chidambaram Medical College students' struggle online

 

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 51 நாட்களாக, மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி தொடர்ந்து நூதன முறையில் அறவழியில் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் போராட்டத்தை தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலையில், கடந்த ஒரு வார காலமாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அமைதியான முறையில் நூதனமாக செய்து வருகிறார்கள்.

 

Thirumavalavan, Jawaharlal Nehru, Udayanithi Stalin among others support Chidambaram Medical College students' struggle online

 

இந்நிலையில் இவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர்களின் விடுதியில் உணவைத் தடை செய்தது. அதேபோல் மின்சாரம், குடிநீர் ஆகியவற்றையும் நிறுத்தியுள்ளது. இதனால் மாணவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், நேற்று (27.01.2021) திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களின் போராட்டக் களத்தில் இணையவழி வாயிலாக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, மாணவர்களின் போராட்டத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என்றும், மாணவர்களின் பிரச்சினைகள் குறித்து, வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுப்பார்கள் என்றும் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

 

Thirumavalavan, Jawaharlal Nehru, Udayanithi Stalin among others support Chidambaram Medical College students' struggle online

 

அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மாணவர்களுக்கு இணையவழியில் ஆறுதல் கூறினார். அப்போது மாணவர்களின் ஜனநாயக முறையான நியாயமான போராட்டத்தை தமிழக அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மாணவர்களின் போராட்டத்திற்கு தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளிக்கும். மாணவர்கள் வெற்றி கிடைக்கும் வரை போராட வேண்டும். ஒருபுறம் விவசாயிகள் போராட்டம், மறுபுறம் மாணவர்கள் போராட்டம் மிகவும் வேதனை அளிக்கிறது. மாணவர்களுக்கு உணவு, குடிநீர், மின்சாரம் நிறுத்தியது மிகவும் கண்டனத்திற்குரியது. விரைவில் மாணவர்களை போராட்டக் களத்தில் சந்தித்துப் பேச உள்ளதாக கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மாணவர்களுக்கு ஆறுதல் கூறி பேசுகையில், “மருத்துவ மாணவர்கள் 50 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை அரசு அழைத்து பேசாதது பேராபத்தை விளைவிக்கும். எனவே தமிழக அரசு உடனடியாக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். விடுதியில் உணவு, குடிநீர், மின்சாரம் தடை செய்ததை வன்மையாக மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது. மாணவர்களின் போராட்டத்திற்கு அனைத்து விதத்திலும் மனிதநேய மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும்,” என அவர் இணையவழியில்  ஆதரவு தெரிவித்தார்.

 

ஆளுங்கட்சியை தவிர மற்ற அனைவரும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆளுங்கட்சியினர் போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு முதல்வர் மற்றும் அமைச்சரிடம் அழைத்து செல்வதாக மாணவர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் மாணவர்களோ கடந்த 51 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், ‘எந்த ஒரு தீர்வும் இல்லாமல் எப்படி போராட்டத்தை கைவிட முடியும்’ என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

இதனைத் தொடர்ந்து இன்று (28.01.2021) தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் மற்றும் மருத்துவர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அடையாள கருப்புக்கொடி ஏந்தி பணி செய்வது மற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் அடிகளார்கள் போராட்டம்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
struggle at Trichy Srirangam

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி திருக்கோவில் ஆரியப்படாள் வாசல்  அருகே  கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் இச்சிலை கடந்த 2015 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தால் நகர்த்தி வைக்கப்பட்டது. இதற்கு திருமால் அடியார் குழாம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட பெருமாள் அடியார் குழாமினர், அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பெருமாள் பண்ணிசைத்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

உயிரற்ற சடலங்களுக்கு இவ்வளவு மதிப்பா? மாற்றி யோசித்த கேரள அரசு!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kerala earned revenue by selling corpses

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.