திருமாவளவனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற முருகுமாறனின் வெற்றி செல்லும் - உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் கடந்த 2016-ல் சட்ட மன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த முருகுமாறன் மறுபடியும் போட்டியிட்டார். அப்போது தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது தபால் வாக்கினை எண்ணும்போது திருமா 67 வாக்கில் தோல்வியுற்றார் என அறிவிக்கப்பட்டது.

chennai highcourt

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதனைதொடர்ந்து அவர் தபால் வாக்கில் முறைகேடு நடந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பிப் 7-ந்தேதி இன்று அதிமுக சார்பில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முருகுமாறனின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் முருகுமாறன் மற்றும் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

highcourt Thirumavalavan
இதையும் படியுங்கள்
Subscribe