Advertisment

பா.ஜ.க கூட்டணியை ஆட்சியமைக்க அழைத்தால் அது ஜனநாயகப் படுகொலை - திருமாவளவன் காட்டம்!

fg

Advertisment

பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டன.

இந்நிலையில், இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியானது. இதில், 125 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தேர்தல் முடிவுகளைமுறையாக அறிவிக்கவில்லை எனக்கூறி, தேர்தல் ஆணையத்திடம் ஆர்.ஜே.டி- காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், பி.ஜே.பி கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கக் கூடாது என்று அவர் கடுமையான முறையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

thiruma valavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe