விடுதலைச் சிறுத்தைகள் கட்சியன் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்தநாளை அக்கட்சியினர் தமிழர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில், இந்த ஆண்டு தனது பிறந்த நாளான ஆகத்து 17 அன்று ஒரு லட்சம் பனை விதைகளை விதைத்து பனை வளர்ப்போம் என்று தொல்.திருமாவளவன் அறிவித்திருக்கிறார். இதற்காக தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் பனை விதைகளை சேகரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் திருவள்ளூர் மாவட்டம் சித்துக்காடு பகுதியிலும் இன்று (12.8.2018) காலை சென்னை ஐஐடி வளாகத்திலும் தொல்.திருமாவளவன் பனை விதைகளை சேகரித்தார். சேகரிக்கப்பட்ட சில பனை விதைகளை விடுதலைச் சிறுத்தைகளின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் விதைத்துள்ளார். ஆகத்து 17 அன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பனை விதைகளை விடுதலைச் சிறுத்தைகள் விதைக்க இருக்கிறார்கள்.