Advertisment

திருமாவளவன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

thiruma

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் நேற்று விழுப்புரத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்தார். காலை திருமண நிகழ்ச்சி செல்லும் வழியில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடல் நலம் விசாரித்தார்.

Advertisment

உடனடியாக விக்கிரவாண்டி மருத்துவர்கள் முகுந்தன்,ராஜி தம்பிதுரை அவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருமாளவனை பரிசோதித்த மருத்துவர்கள் உடற்சோர்வு, தூக்கமின்மை,நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, ஓய்வு மிக அவசியம் என அறிவுறுத்தினர். மாலை சகஜ நிலைக்கு மீண்டும் திரும்பினார். பின்னர் 8.20 க்கு சென்னைக்கு புறப்பட்டார்.இந்நிலையில் இன்று சென்னை அப்பல்லோவில் மீண்டும் சென்னை அப்பல்லோவில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

appolo Thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe