Advertisment

ஆனந்த் டெல்டும்பேவைக் கைது செய்வதைக் கைவிடுக!  திருமாவளவன் வலியுறுத்தல்

t

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’உலகறிந்த சிந்தனையாளரும் , கல்வியாளருமான ஆனந்த் டெல்டும்ப்டே மீது பொய்வழக்கு போடப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரைக் கைது செய்வதற்கு மகாராஷ்டிர பாஜக அரசு மேற்கொண்டுள்ள முயற்சியைக் கைவிடுமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

Advertisment

1818 ஆம் ஆண்டு பீமா கோரேகான் என்னுமிடத்தில் மஹர் சாதியினர் இடம்பெற்ற பிரிட்டிஷ் படை, பேஷ்வாக்களின் படையை வெற்றிகொண்ட யுத்தத்தின் 200 ஆவது ஆண்டை நினைவுகூர்வதற்கு புனேவுக்கு அருகிலுள்ள ஷனிவார் வாடா என்னுமிடத்தில் 2017 டிசம்பர் 31 ஆம் தேதி ’எல்கார் பரிஷத்’ என்ற பெயரில் விழா ஒன்று நடைபெற்றது. அதில் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் சமூக இயக்கங்களும் பங்கெடுத்தன.

Advertisment

2018 ஜனவரி 1 ஆம் நாள் பீமா கோரேகான் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கூடுவதைப்போல லட்சக்கணக்கில் தலித்துகள் கூடினார்கள். அவ்வாறு கூடிய தலித்துகள் மீது சனாதனக் கும்பல் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து தலித்துகள் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். அதனால் ஆத்திரமுற்ற பாஜக அரசு ’எல்கார் பரிஷத்’ விழாவை நடத்தியவர்கள் ’நகர்ப்புற நக்ஸலைட்டுகள்’ என முத்திரை குத்தி அந்த விழாவுக்குக் கொஞ்சமும் தொடர்பே இல்லாத மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஹிகிறிகி எனப்படும் ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறைப்படுத்தி வருகிறது. இப்போது அந்த வழக்கில் உலகறிந்த தலித் சிந்தனையாளரும் கல்வியாளருமான ஆனந்த் டெல்டும்ப்டேவைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. பாஜக அரசின் இந்த தலித் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்மீதான பொய் வழக்கை ரத்துசெய்யுமாறு மகராஷ்டிர அரசை வலியுறுத்துகிறோம்.’’என்று தெரிவித்துள்ளார்.

Thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe