Skip to main content

’தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது’- நாடாளுமன்றத்தில் திருமாவளவன் உரை

Published on 13/07/2019 | Edited on 13/07/2019

 

11.07.2019 இரவு 8.15 மணியவில் நாடாளுமன்றத்தில் சிதம்பரம் தொகுதி எம்.பி.  உரையாற்றினார். அப்போது, “மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே இன்று காலையில் தாங்கள் அனுப்பிய 'ஸ்வச்தா அபியான்' சுற்றறிக்கை இந்தியில் மட்டுமே இருப்பதைக்கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் எங்கள் கோரிக்கையை ஏற்று இன்று பிற்பகலில் அக்கடிதம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மக்களவையில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதற்கு நன்றி.  

t

எனது தொகுதியை பற்றி பேசுவதற்கு எனக்கு போதிய நேரத்தை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

 

உலகிலேயே மூன்றாவது பெரிய துறை நமது இந்திய இரயில்வே துறை. நான் தென்னக இரயில்வேயில் நடைபெறும் சில பிரச்சனைகள் குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.  

 

தென்னக இரயில்வேயில் பணிநியமனங்களின் போதும் தொழிற்பழகுனர் பயிற்சி   நியமனங்களின் போதும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கே (அந்த அந்த மாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கே) 80% வழங்க வேண்டும் என சட்டம் (apprenticeship act) இருக்கிறது. ஆனால், அண்மைக்காலமாக கடந்த 14 ஆண்டுகளில் ஏறத்தாழ 15,000 பேர் அப்ரண்டிசிப் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருக்கிறார்கள். அண்மையிலே திருச்சி பொன்மலை பகுதியில் அப்ரண்டிசிப் பயிற்சிக்காக தேர்வு நடைபெற்றது. அதில் 1765 பேர் தேர்வு செய்யப்பட அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தது.


இரயில்வே தேர்வில் வடஇந்தியாவைச் சார்ந்த 1600பேர்க்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 165 பேர் மட்டுமே வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.   இந்த ஓரவஞ்சனை ஏன் நடக்கிறது என்பதை மாண்புமிகு இரயில்வே துறை அமைச்சர் கவனிக்க வேண்டும், இது குறித்து ஒரு ஆய்வை நடத்த வேண்டும்.

 

இது தொடர்பாக அந்த சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் உயர்நீதிமன்றத்திலே ஒரு வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கில் அவர்கள் சிபிஐ விசாரணை கேட்டு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஏனென்றால் அதற்காக ஆர்ஆர்பி நடத்துகிற தேர்விலும் கூட ஊழல் முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறது என்பதை அவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்திலே நடைபெறும் வழக்கு குறித்து நீதியரசர் தண்டபாணி அவர்கள் “There is something serious in this. such type of discrimination cannot be done against a particular state alone. If such things are done by authoriies of tamilnadu it would have been made a national issue. They would have been called antinational “ என குறிப்பிடுகிறார். எதற்காக இதை சொல்கிறார் என்றால் அந்த வழக்கு நடந்த போது அந்த வழக்கை தள்ளிவைத்துவிட்டு அதில் சொல்லப்பட்ட கருத்துகளை அவர் மேற்கோள் காட்டியிருக்கிறார்.  “ Postal recruitment camp in which state Haryana, Maharashtra and Punjab scored higher marks in tamil exams when compared to tamil candidates” என குறிப்பிட்டிருக்கிறார்.

 
தமிழ் படித்த மாணவர்களை விட பிற மாநிலங்களைச் சார்ந்த தமிழ் தெரியாத மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சியான தகவல் என்பதை மாண்புமிகு அவைத்தலைவர் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, எழுத்துத் தேர்விலும் அங்கே ஊழல் முறைகேடுகள் நடக்கின்றன. 


திட்டமிட்டு வடமாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு தரப்படுகிறது. தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது ஒரு மாபெரும் அநீதி. இதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கவனத்துக்கு எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு அங்கே முக்கியத்துவம் தரவேண்டும் முன்னுரிமை தர வேண்டும். குறிப்பாக பியூன், ட்ரக் மேன், கேங் மேன், சானிட்டரி வோர்கர் போன்ற வேலைகளில் தான் இந்த முறைகேடுகள் நடக்கின்றன.

 

சென்னை இரயில் நிலைய அதிகாரிகள் பிற அதிகாரிகளோடு தொடர்பு கொள்கிற போது இந்தியில் தான் பேச வேண்டும் என்கிற சுற்றறிக்கையை பிறப்பித்தார்கள். ஆனால், அந்தந்த பகுதியைச் சார்ந்த அந்த மொழியைச் சார்ந்தவர்களைத் தான் வேலையில் நியமனம் செய்ய வேண்டும் என நம் சட்டம் (Mandatory One) சொல்கிறது.

 

அந்த மொழியைச் சார்ந்தவர்களுக்கு வேலை நியமனம் இல்லாத காரணத்தால் பிற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் இருக்கிற காரணத்தால் அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியவில்லை பிராந்திய மொழிகளாக இருக்கக் கூடிய தமிழ் போன்ற மொழிகளும் தெரியவில்லை. இதனால் அவர்கள் வேறு மொழியை பேசக்கூடிய நிலை ஏற்படுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, தயவுகூர்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நான் விடுக்கிற வேண்டுகோள் apprenticeship act சட்டத்தின்படி வேலைவாய்ப்பில், தொழிற்பழகுனர் பயிற்சியில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணிநியமனங்களை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

 

என்னுடைய தொகுதி ஒரு சுற்றுலாத்தலம், சிதம்பரம் என்பது மிகப்பெரிய உலகபுகழ்பெற்ற சிவபெருமான் கோவில் உள்ள தலம். அங்கே ஏராளமானவர்கள் வந்து போகிறார்கள். இராமேஸ்வரத்திலிருந்து திருப்பதி வரையில் வாரம் மூன்று நாள் இரயில் போக்குவரத்து இருக்கிறது. திருப்பதி இராமேஸ்வரம் இரயிலை சிதம்பரம் தொகுதியிலே  நாள்தோறும் பயணிகள் வந்து செல்கிற வகையில் அதை தினசரியாக மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“திமுகதான் எதிர்க்கட்சி என்பதுபோல் மோடி பிரச்சாரம் செய்கிறார் - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Thirumavalavan alleges Modi is campaigning as if the DMK is the opposition

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செவ்வாய்க் கிழமை(16.4.2024) சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பு.முட்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கி 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்களிடம் திருமாவளவன் பேசுகையில், “இந்தத் தேர்தலில், நரேந்திர மோடியின் நாசகரமான ஆட்சியை வீழ்த்த தளபதி மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியும் வியூகம் அமைத்து களமாடி வருகின்றனர். பாஜக விற்கு எதிரான வியூகம் அமைத்து, பல்வேறு கட்சிகளை  ஒருங்கிணைத்து  இன்று வலுவான தேர்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார். காங்கிரஸுக்கு பதிலாக திமுகதான் தனது எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயே டேரா போட்டு தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். கேஸ் விலை உயர்வு மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல்  சாதிய மோதல்கள் அதிகரிக்கவும் மோடி தான் காரணம். மோடி  மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  ரேசன் கடை இருக்காது. 100-நாள் வேலைத்திட்டம் இருக்காது” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன்,  திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன், திமுக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் விஜய் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.