Advertisment

எந்த சின்னத்தில் போட்டி? திருமாவளவன் ஆலோசனை

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் அல்லது விழுப்பும் தொகுதிகள் ஒதுக்கப்படவிருக்கிறது. இதையடுத்து விசிக எந்த சின்னத்தில் போட்டி யிடுகிறது என்பது குறித்து திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

Advertisment

t

’’நாங்கள் ஏற்கனவே பல தேர்தல்களில் தனி சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச்சொல்லி திமுக எந்த அழுத்தமும் தரவில்லை. தற்போதுள்ள சூழலில் கூட்டணி நலன் கருதி எந்த சின்னத்தில் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும், உகந்ததாக இருக்கும் என்பது குறித்து கலந்து பேச வேண்டியதிருக்கிறது. எனவே விசிகவின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துபேசி இரண்டொடு நாளில் முடிவு அறிவிக்கப்படும்’’என்று தெரிவித்தார்.

vck stalin thirumavalalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe