thirumanur farmers tractor rally

Advertisment

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருமானூரில் தேசியக் கொடியுடன் டிராக்டர் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க. சண்முகசுந்தரம், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அம்பேத்கர் வழியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாளை அமரமூர்த்தி, திமுக மாவட்ட துணைச் செயலாளர் தனபால், உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க டிராக்டர் பேரணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து கிளம்பிய டிராக்டர் பேரணியை காவல் நிலையத்திற்கு எதிரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளனர். நிகழ்ச்சியில் CPI ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மூ. மணியன், முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நிஜாமுதீன், தேசிய தென்னிந்திய நதிகள் அமைப்பின் சார்பில் வேலுமணி, உதயகுமார், நல்லதம்பி,உழவர் அமைப்பாளர் சங்க மாவட்டத் தலைவர் கருப்பையா, மதிமுக விவசாய அணி சார்பில் சேகர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் ராஜா,IJK மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.