Advertisment

தூக்கணாங்குருவி கூடு கட்டியதால் மழை பொழியும் என விவசாயிகள் நம்பிக்கை

ggggg

பொதுவாக தூக்கணாங்குருவி கூடுகட்டினாலே மழை பொழியும் என்ற நம்பிக்கை உண்டு. மேலும் நம் முன்னோர்கள் நூல்களில் தெளிவுபட தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கீழக்காவட்டாங்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குந்தபுரம் கிராமத்தில் விவசாயி அசோகன் வயலில் உள்ள தென்னை மரங்களில் தூக்கணாங்குருவி கூடுகள் கட்டி உள்ளது. பொதுவாக பனை உள்ளிட்ட மரங்களில் கூடுகட்டுவது வழக்கம். இந்நிலையில் தென்னை மரத்தில் தூக்கணாங்குருவி குருவி கூடு கட்டியுள்ளதை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Advertisment

இது குறித்து கிராமத்தில் உள்ள பெரியவர்களிடம் கேட்டபோது, இந்த ஆண்டு பருவகால நிலை நன்றாக இருக்கும். மழைப்பொழிவு விவசாயத்திற்கு போதுமானதாக இருக்கும். மழைப்பொழிவால் நல்ல விளைச்சல் இருக்கும். தூக்கணாங்குருவிகளின் கூடு தென்னை மரத்தில் கட்டி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்பதனை காட்டுவதாக உள்ளது என கூறினர்.

Ariyalur rain taluk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe