THIRUMALIZHAI MARKET VEGETABLE PRICE LOW

காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் திருமழிசை மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை குறைந்து காணப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 350 வாகனங்களில் 4 ஆயிரம் டன் காய்கறிகள் வந்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றன. இருப்பு வைக்க முடியாத காரணத்தால் காய்கறிகள் அழுகி கீழே கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

ஒரு கிலோ தக்காளி ரூபாய் 10, பெரிய வெங்காயம் ரூபாய் 10, சாம்பார் வெங்காயம் ரூபாய் 50, உருளைக்கிழங்கு ரூபாய் 25, கேரட் ரூபாய் 15, பீட்ரூட் ரூபாய் 15, பீன்ஸ் ரூபாய் 50, முள்ளங்கி ரூபாய் 15, வெண்டைக்காய் ரூபாய் 15க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment