Advertisment

ஒரே மேடையில் திருமா, விஜய்; வெளியான பரபரப்பு தகவல்

Thiruma, Vijay on the same stage; Released information

தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்பது குறித்துப் பேசி இருந்தார்.விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினம் அன்று விசிக தலைவர் திருமாவளவன் எழுதியுள்ள புத்தகம் ஒன்று வெளியிடப்பட இருக்கிறது. இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

திருமாவளவன் புத்தகத்தை வெளியிட விஜய் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. மாநாட்டுக்கு பிறகு விஜய் பேசிய சில கருத்துக்களை விசிகவின் தலைவர் திருமாவளவன் எதிர்த்திருந்தார். இந்நிலையில் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவனும், விஜய்யும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

politics vck
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe