பெகாசஸ் உளவு விவகாரம்; "உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை" - திருமாவளவன் வலியுறுத்தல்

df

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் இந்திய அரசியல் தலைமைகள் மற்றும் பத்திரிகையாளர்களின் செல்ஃபோன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தியா மட்டுமில்லாது பல்வேறு நாட்டு தலைவர்களின் உரையாடல்களும் இவ்வாறு கண்காணிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதில் இந்தியாவில் மட்டும் 300 பேர் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியது.

உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் செல்ஃபோன் எண்களும் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், " பெகாசஸ் மூலம் உளவு பார்க்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Rahul gandhi Thirumavalavan
இதையும் படியுங்கள்
Subscribe