Advertisment

திருக்குவளையில் உதயநிதி கைது!

thirukuvalai udhayanidhistalin

உதயநிதி ஸ்டாலினின் திருக்குவளை வருகையால், டி.ஐ.ஜி தலைமையில் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், உதயநிதி மேடையில் ஏரி பிரச்சாரம் செய்தால், கைது செய்வோம் எனக் காவல்துறையினர் கூறியிருப்பது பெரும் பரபரப்பைஏற்படுத்தியிருந்த நிலையில், தற்பொழுது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரச்சாரப் பயணத்தைதுவங்குவதற்காக, இன்று மாலை 3 மணிக்கு, திருவாரூர் வந்தடைந்தார். அங்கு சன்னதி தெருவில் இருக்கும் கலைஞரின் சகோதரி வீட்டில், மதிய உணவை முடித்துக்கொண்டு, கலைஞரின் தாயார் சமாதியிருக்கும் காட்டூருக்குச் சென்று வணங்கினார். அப்போதே காவல்துறையினர் ஐந்து கார்களுக்கு மேல் சென்றால் கைது செய்வோம் எனக் கூறியிருந்தனர்.

Advertisment

இந்நிலையில், திருக்குவளையில் தடையை மீறி பிரச்சாரம் மேற்கொள்ள வந்ததாக, உதயநிதிஸ்டாலினை போலீசார் கைதுசெய்து, திருமணமண்டபம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றனர். உதயநிதியின் கைதைஎதிர்த்தும், அவரைவிடுதலை செய்ய வலியுறுத்தியும்அங்கிருந்த தி.மு.கதொண்டர்கள்கோஷம்எழுப்பினர். அதேபோல்எத்தனை இடையூறுகள் வந்தாலும்தி.மு.க பிரச்சாரம் தொடரும்எனஉதயநிதிஸ்டாலின் தெரிவித்தார்.

thirukuvalai udhayanidhistalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe