Advertisment

காவல் நிலைய ஆய்வாளர் பணி நீக்கம்; டி.ஐ.ஜி அதிரடி உத்தரவு

Thirukovilur all women police station inspector suspended

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகக் கடந்தசில மாதங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றார் மகேஸ்வரி. இவர் பொறுப்பேற்ற நாள் முதல் இவர் மீது பல்வேறு புகார்கள் மாவட்ட காவல் துறைக்கு வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதியிடம் தொடர்ந்து புகார்கள் சொல்லப்பட்டு வந்தது.

Advertisment

இந்நிலையில், நேற்று முன்தினம்(24.7.2024) இரவு திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார் எஸ்.பி. இதனை அடுத்து அவர் மீது பெறப்பட்ட புகார்கள் நிரூபணம் ஆனதை அடுத்து ஆய்வாளர் மகேஸ்வரியைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கள்ளக்குறிச்சி எஸ்பி பரிந்துரைத்தார். இதன் பெயரில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி திசா மீட்டல் ஆய்வாளர் மகேஸ்வரியைத் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisment
woman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe