Advertisment

“திருக்குறள் முற்றோதல் நிகழ்வு”

Thirukkural

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் மெய்கண்டார் ஆலையத்தில் “திருக்குறள் முற்றோதல் நிகழ்வு” கடந்த 15-1-2019 காலை 9 .30 மணிக்கு துவங்கப்படது.

Advertisment

இந்த நிகழ்வை பெண்ணாடம் திருக்குறள் மைய செயலாளர் லயன். தா. கோ. சம்பந்தம் ஏற்ப்பாடு செய்துள்ளார். முன்னாள் தலைமை ஆசிரியர் த. மாயில்வாகனன் அவர்கள் லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் லயன். மு. ஞானமூர்த்தி, ராஜமாணிக்கம், கால்நடை மருத்துவர் சிதம்பரம், கோடி ஆகியோர் திருக்குறளை படித்து முற்றோதல் நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர்.

Advertisment

இந்த நிகழ்வு 15-2-2019 வரை ஒரு மாத காலம் தினமும் மாலை 5 மணிமுதல் இரவு 8மணிவறை நடைபெறும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து இளைஞர்கள், மாணவர்கள் வருகைதந்து திருக்குறள் வகுப்பில் கலந்து கொண்டு முற்றோதல் நிகழ்சியில் பங்கெடுப்பார்கள்.

குறள் பற்றிய பொருள் விளக்கம், குறள் படித்து நினைவில் நிருத்துதல், குறள் படித்து பொருள் விளக்கல், வினாடி வினா நிகழ்ச்சி ,குறளை இசையுடன் பாடுதல், போன்ற பல்வேறு நிகழ்வுகளும், திறனாய்வு போட்டிகளும் நடைபெரும். ஒரு மாத காலம்தினமும் நடைபெறும் இந்நிகழ்வில் பல்வேறு தமிழறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

cadalure pennadam Thirukkural
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe