திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 1ஆம் தேதி நள்ளிரவு சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், முருகன் பெங்களூரு எம்.ஜி ரோடு மேயோ ஹால் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள தகவல் வெளியானது.பெங்களூரு பானசவாடி காவல்நிலையத்தில் முருகன் மீது 83 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

 11 kg of jewelery recovered

இந்நிலையில் திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடத்தப்பட்ட கொள்ளையில் 11 கிலோ நகைகள் மீட்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.கொள்ளையன் முருகன்அளித்த தகவலின் அடிப்படையில் பெங்களூர் போலீசார் நகைகளை மீட்டு சென்றனர். நகைகளை எடுத்து சென்றபெங்களூர் போலீசாரை துரத்தி சென்றபெரம்பலூர் போலீசார்மீட்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்தபோது அது லலிதா ஜுவல்லரியின் நகைகள்தான் உறுதி செய்தனர். பின்னர்பெரம்பலூர் போலீசார் அந்த நகைகளை பெங்களூர் போலீசாரிடம் இருந்துமீட்டனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில்இதற்கு முன்பே திருவாரூரில் மணிகண்டனிடம் 4.5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.