Thiruchy manaparai incident

Advertisment

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மதுபோதையில் குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்த ஊழியர் பணியில் மெத்தனமாக இருந்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மணப்பாறை வட்டத்திற்குள் 4 குறுவட்டங்கள், 57 வருவாய் கிராமங்கள் உள்ளன. மணப்பாறை வட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் பட்டா, நில அளவீடு உள்ளிட்ட வருவாய்த்துறை சார்பிலான பணிகளுக்காக மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பதிவறைஅலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் அன்புச்செல்வன் என்பவர் பணி நேரத்தில் மதுபோதையில் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். இதனை அங்கு வந்த பொதுமக்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் வைரலானதை தொடர்ந்து வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் புகாருக்கு உள்ளான அன்புச்செல்வனை பணியிடை நீக்கம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.