Advertisment

திருச்சியில் கந்து வட்டி தொல்லையால் ஒருவர் தற்கொலை!

கந்து வட்டி கொடுமையில் தற்கொலை மரணம் என்பது தற்போது வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்று காலை லால்குடியில் கந்து வட்டி கொடுமையால்ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

Advertisment

thiruchy incident... police investigation

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுமருதூரை சேர்ந்தவர் எட்வர்டு . இவர் கூலி விவசாயி. இவருக்கு ஸ்டெல்லா, சாலினி, சந்திரா இந்த மூன்று மகள்களும் சாமுவேல் என்கிற மாற்றுத்திறனாளிஇருக்கிறார். அவருக்கு 17 வயதாகிறது. இந்த குழந்தைகளின் படிப்பு செலவுக்காகவும், மகனின் மருத்துவ செலவிற்காகவும் தாளக்குடியில் உள்ள சூரி என்பவரிடம் வீடு பத்திரத்தை அடமானமாக வைத்து 30 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கி இருக்கிறார். வட்டி அதிக வட்டியாக இருந்தாலும் தொடர்ந்து கட்டிக்கொண்டே வந்தவர் தீடீரெனஅவருடைய மகன் சாமுவேல் கடந்த 3 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் திருச்சி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் அவரால்வட்டி செலுத்த முடியவில்லை. இந்தநிலையில் சூரியும் அவருடைய மருமகனும் எட்வர்டிடம் வட்டி பணம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார்.

Advertisment

thiruchy incident... police investigation

இது குறித்து கடந்த சிலநாட்களாக எட்வர்டு தன்னுடைய அண்ணகளிடம் வட்டி கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அவர்கள் போலிசில் புகார் கொடுக்க சொல்லி அறிவுறுத்திருக்கிறார்கள். இந்தநிலையில் எட்வர்டு வீட்டின் பின்புறத்தில் உள்ள புளிமரத்தில் தூக்கபோட்டு இறந்துள்ளார். இது குறித்து சமயபுரம் போலிசாருக்கு எட்வர்டு குடும்பத்தினர் புகார் கொடுக்க, உடனே சமயபுரம் போலிசார் எட்வர்டு உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்குகாரணம் என்ன என்றுவிசாரணையில் இறங்கியுள்ளார்.

loanfraudcases police Suicide thiruchy
இதையும் படியுங்கள்
Subscribe