Advertisment

ஊரடங்கு நேரத்தில் கொலைக்களமாகும் திருச்சி நகரம்!

thiruchy incident... police investigation

நேற்று முன்தினம் மாலை திருச்சியில் கோபிகண்ணன் என்ற வழக்கறிஞர் தன்னுடைய மகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது.

Advertisment

இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம். இந்த வழக்கில் இன்று பீமா நகர் பகுதியை சேர்ந்த 6 பேரை காவல்துறை கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள இந்த கொலை சம்பவம் அதன் முக்கிய பின்னணி குறித்து போலீஸ் விசாரிக்க ஆரம்பித்துள்ளது. அதில் குறிப்பாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஹேமந்த் குமார் என்ற நபரின் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக இந்த வழக்கறிஞர் கோபி கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஹேமந்த் குமாரின் தம்பி கூலிப்படையை ஏவி கொன்றிருக்கலாம் என்ற ஒரு சந்தேகமும், அல்லது கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனையில் சுமார் பத்து லட்சம் ரூபாயை ஏமாற்றியதால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும்காவல்துறையினருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கு குறித்து தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

Investigation police thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe