Advertisment

திருச்சி பாஜக பிரமுகர் கொலை... தனிப்பட்ட விரோதமே காரணம்... காவல் ஆணையர் பேட்டி!

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல் செயலாளர் விஜயரகு கடந்த 27ம் தேதி காலை 5:30 மணி அளவில் படுகொலை செய்யப்பட்டார்.

Advertisment

திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்த முகமது உசேன் என்பவரது மகன் முகமது பாபு என்கிற மிட்டாய் பாபு, 24, விஜயரகுவின் 17 வயது மகளுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை விஜயரகு மற்றும் அவரது குடும்பத்தார் கண்டித்ததால் அதன்காரணமாகஏற்கனவே கடந்த 2017 மற்றும் 19ம் ஆண்டுகளில் முகமது பாபு விஜய ராகுவை தாக்கியதாக வழக்குகள் உள்ளன.

Advertisment

thiruchy bjp

இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி காலை வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த விஜயரகுவை, முஹம்மது பாபு மற்றும் சிலர் வெட்டி படுகொலை செய்து, விட்டு தப்பி ஓடி விட்டனர்.காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில், நேற்று இரவு சென்னை போலீசார் முகமது பாபு உட்பட 5 பேரை கைது செய்தனர்.

thiruchy incident... The cause is personal hostility...

போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கைது செய்யப்பட்ட முகமது பாபு, 24, ஹரிபிரசாத், 20, சுடர் வேந்தன் 19, சச்சின்19, முகமது யாசர், 19 ஆகிய 5 பேரும் கொண்டு வரப்பட்டனர்.திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சியில் பாரதிய ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் விஜய்ரகுவுக்கும் பாபு என்கின்ற மிட்டாய் பாபுவுக்கும் தனிப்பட்ட விரோதம் காரணம் என திருச்சி மாநகர காவல் ஆணையர் பேட்டி அளித்தார்.

police thiruchy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe