Advertisment

பூங்கா திறப்பதைவிட முதல்ல ரோட்டை போடுங்க... அமைச்சரை மறித்த பெண்கள்!

ஸ்மார்ட் சிட்டி என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து திருச்சி மாநகராட்சியின் சார்பில் ரோடு போடுவதை விட பூங்கா திறப்பதிலே திருச்சி அமைச்சர்களும், மாநகராட்சி ஆணையரும் முனைப்பாக இருக்கிறார்கள். இதனால் கொதிப்படைந்த பெண்கள் அமைச்சரை முற்றுகையிட்டு ரோடு போட சொல்லி வலியுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருச்சியில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் வேலுமணி திருச்சி வந்திருந்தார். உள்ளாட்சிதுறை அமைச்சர் வருவதால் நேற்றை தினம் பல இடங்களில் அவசர அவசரமாக ரோடுகள் பேட்ச் ஒர்க் பார்க்கப்பட்டது.

Advertisment

in thiruchy; first Put the road and then open park...women protest in front of minister

திருச்சி காஜாமலை பெரியார் நகரில், 73 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவை அமைச்சர் வேலுமணி திறந்துவைப்பார் என்பதால் அவ்வழியில் புதியதாக சாலைகள் போடப்பட்டன. அமைச்சர் செல்லும் பாதையில் உள்ள அலிகான் குளத்தெருவில், பாதியளவு மட்டுமே கான்கீரிட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மீதியுள்ள காந்திநகர் பகுதியில் ரோடு போடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை அமைச்சர் வேலுமணி தனிக்காரிலும், திருச்சி கலெக்டர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் ஆகியோர் தனித்தனியே சென்றனர். இதில் கலெக்டர் சிவராசு, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் ஆகியோரும் முற்றுகையில் சிக்கினர்.

அப்பொது கலெக்டர் சிவராசு முற்றுகையிட்ட பெண்களிடம் யம்மா நான் தாம்மா கலெக்டர் நா இந்த ரோட்டை உடனே போட சொல்றேன் என்று சொல்லி பெண்களை சமாதப்படுத்த முயன்று கொண்டிருக்கும்போது பின்னால் அமைச்சர் வேலுமணியின் காரை பார்த்தவுடன் அவரை நோக்கி முற்றுகையிட பெண்கள் சென்று பூங்கா திறக்குறதைவிட ரோட்டை போடுங்கள் அமைச்சரேஎன்று பெண்கள் கோரசா சொல்ல.. முற்றுகையால் காரில் இருந்து இறங்கிய அமைச்சர் வேலுமணி விரைவில் சாலை அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தின் பேரில் கலைந்து சென்றனர்.

அமைச்சர் வேலுமணி காரில் இருந்து இறங்கி சென்றபோது அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் காரிலேயே அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

minister park protest thiruchy velumani Women
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe