Advertisment

கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்றால் கைது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

Minister KN Nehru press meet

Advertisment

திருச்சியில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாளை முன்னிட்டும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள கலைஞர் அறிவாலயம், கரூர் புறவழி சாலை, சாஸ்திரி சாலை, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்கட்டமாக நிழல் மற்றும் ஆக்சிஜன் தரக்கூடிய மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.

இதில் வேம்பு, புங்கன், மகிழம், அரசு, ஆல், நாவல், ஏழிலை பாலை உள்ளிட்ட 25 ஆயிரம் எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை நடுவதற்கான துவக்க விழாவும் நடைபெற்றது.

இவ்விழாவில் மரக்கன்றுகளை நட்டு விழாவை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு,

Advertisment

''கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளை தனியார் மருத்துவமனைகள் கள்ளச்சந்தையில் விற்றால் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள். தமிழகத்திலேயே கரோனா தடுப்பூசி போட்டப்பட்டதில் திருச்சி முதன்மை மாவட்டமாக விளங்குகின்றது. தமிழக முதல்வர் தடுப்பூசிகளை வரவழைத்து உள்ளார். அது வரும் பச்சத்தில் தட்டுபாடுகள் இல்லாத நிலை உருவாகும்'' என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், மாநகராட்சி தலைமை பொறியாளர் அமுதவல்லி, மாவட்ட வனத்துறை அலுவலர் சுஜாதா, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார், பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜி, கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

black fungus corona virus
இதையும் படியுங்கள்
Subscribe