Advertisment

திருச்சியில் ஆவினில் 5 பேர் திடீர் பணியிடமாற்றம்! ஏன் ?

thiruchy avin

Advertisment

கரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டிலே முடங்கி கிடக்கிறார்கள் அரசு நிறுவனங்கள் மட்டும் குறிப்பிட சிலரை மட்டும் பணிக்கு அழைத்திருக்கிறார்கள். அதன்படிஆவின் நிறுவனங்கள் முழுவீச்சோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் திருச்சி ஆவின் நிறுவனத்தில் சிலரை வெளியே தெரியாமல் பணியிட மாற்றம் செய்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் பணி இடமாற்றமா? என்கிற கேள்வி வர, என்ன வென்று விசாரிக்கையில்,

கிளினிங் ஆப்ரெட்டர் ஒரு பெண் – திருச்சியில் இருந்து மணப்பாறைக்கு மாற்றம், மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு அசிஸ்சென்ட் மாற்றம், லேப்பில் வேலை செய்யும் ஒருவர் மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு மாற்றம், மணப்பாறையில் ஆப்ரேட்டர் ஒருவர் ஆவினில் பால் குறைவாக வந்தால் கண்டுபிடிக்கும் பிரிவில் மிகச்சிறப்பாக வேலை செய்பவரை திருச்சிக்கு மாற்றம் செய்கிறார்கள். திருச்சியில் ஆவினில் இருந்து பழைய பால்பண்ணைக்கு ஒருவரை மாற்றியிருக்கிறார்கள்.

மணப்பாறையில் வேலை செய்ய ஆள் இல்லை என்பதற்காக திருச்சியில் இருந்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிலரை நியமித்தார்கள். அவர்களில் சிலரை மீண்டும் தற்போது திருச்சிக்கு மாற்றி இருக்கிறார்கள். இந்த ரகசிய பணி இடமாற்றம் பின்புத்தில் ஆளும்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் ஆவின் முக்கிய புள்ளியின் டிரைவர், புரோக்கர்களாக செயல்படும்ஆவின் முக்கியபுள்ளியின் தம்பி மூலம் பணம் கைமாறியதில் இந்த பணியிடமாற்றம் என்கிறார்கள். ஊரேகரோனாவில் தவிக்குது... ஆவினில் பணி ஓய்வு பெற்றவர்கள் பணி ஓய்வு பணத்திற்கு லஞ்சம் கேட்டு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருச்சி ஆவினில் சத்தம் இல்லாம்பணி இடமாற்றம் என்கிற பெயரில் பண மாற்றம் ஆகுது சார் என்று புலம்புகிறார்கள்.

thiruchy Aavin's milk corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe