கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் கடந்த 4ம் தேதி 134 பெண் காவலர்களுக்கு பயிற்சி துவக்கப்பட்டது. இந்தநிலையில் 10 பயிற்சி பெண் காவலர்கள் மற்றும் பயிற்சி பள்ளியை சேர்ந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர், 2 ஏட்டுகள் உள்ளிட்ட 14 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையொடுத்து இவர்கள் 14 பேரும் கடந்த 12ம் தேதி சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர், 2 ஏட்டுகள்,9 பெண் பயிற்சி காவலர்கள் உள்ளிட்ட 13 பேர் பூரண குணமடைந்து கடலூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு பெண் பயிற்சி காவலர் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த 13 பேரையும் கடலூரில் எஸ்பி ஸ்ரீ அபிநாவ் பேண்ட் இசை முழங்க வரவேற்றுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் 421 பேர் கரோன வைராஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 406 ஆகும்.சிதம்பரம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவகல்லூரி முதல்வர் ராஜ்குமார், கண்காணிப்பாளர் சண்முகம், சிதம்பரம் டிஎஸ்பி கார்திக்கேயன், அண்ணாமலைநகர் ஆய்வாளர் தேவேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பூ மற்றும் பழங்கள் கொடுத்து அனுப்பி வைத்தனர்.