Advertisment

மல்லை தமிழ்ச்சங்கத்தின் முப்பெரும் விழா!

The third festival of the Mallai Tamil Sangam

மல்லை தமிழ்ச்சங்கத்தின் வாழ்த்துப்பாடல், பெருந்தமிழன் விருது, மற்றும் மல்லை சத்யாவின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

Advertisment

மாமல்லபுரம் பே டிரஷர் அரங்கில் நடைபெறும் இந்நிகழ்வை, மல்லை தமிழ்ச்சங்கத்தின் சாசன செயலாளர் கலைச்செம்மல் பாஸ்கர் தலைமை தாங்குகிறார். முத்தமிழைப் போற்றி வாழ்த்துப் பாடல் வெளியீடும், அந்த பாடலை இயற்றிய உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனுக்கு ‘பெருந் தமிழன் விருது’, பாடலை இசையமைத்துப் பாடிய கலைமாமணி லோக மகாராஜனுக்கு ‘பெருந்தச்சன் விருது’ வழங்கப்பட உள்ளது.

Advertisment

மேலும், மல்லை சத்யா எழுதிய தமிழர்களின் அறச்சீற்றம், மணிமகுடமா முள்கிரீடமா?, தென் ஆப்ரிக்காவில் திருவள்ளுவர், மலேசியா நினைவலைகள், வியட்நாம் புரட்சி ஆகிய ஐந்து புத்தங்களும் வெளியிடப்பட உள்ளது. நிகழ்வில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலைமாமணி பெருந்தமிழன் டாக்டர் வி.ஜி.சந்தோசம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற லோக் அதாலத் நீதியரசர் பெருந்தமிழன்,டி என் வள்ளிநாயகம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Festival
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe