Advertisment

அமைச்சர் எ.வ.வேலுவிற்கு தொடர்பான இடங்களில் மூன்றாவது நாளாக சோதனை

 Third day of raids at places related to Minister AV Velu

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில் இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் சோதனையானது தொடர்ந்து வருகிறது.

Advertisment

திருவண்ணாமலையில் எ.வ.வேலுவின் வீடு, கல்லூரி ஆகிய இடங்களில் மீண்டும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் அசோக் நகர், தியாகராய நகர், கீழ்பாக்கம், வெப்பேரி பகுதிகளிலும் அருணை பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, மகளிர் கலைக்கல்லூரி பாலிடெக்னிக் மற்றும் பன்னாட்டு பள்ளிகளிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

Advertisment

அதேபோல் விழுப்புரத்தில் கோல்டன் மார்பில் உரிமையாளர் பிரேம்நாத் என்பவரின் வீடுகள், கடை, விடுதி ஆகிய இடங்களிலும் மூன்றாவது நாளாக வருமானவரிச் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் சென்னை அடையாறில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னை திருமங்கலத்தில் உள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் தொடர்பான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

minister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe