Advertisment

'திரைவானின் சூரியன்...' - நடிகர் ரஜினிகாந்திற்கு முதல்வர் வாழ்த்து!  

'Thiraivanin Suriyan ...' - Chief Minister congratulates actor Rajinikanth!

Advertisment

டெல்லியில் விஞ்ஞான் பவனில் இன்று (25.10.2021) காலை 11 மணிக்கு 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களும் விருதுகளைப் பெற்றனர். திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

திரைத்துறையின் உயரிய விருதானதாதாசாகேப் பால்கே விருதைப்பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு பல்வேறு பிரபலங்கள், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குநெஞ்சம்நிறை வாழ்த்துகள்!திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!' எனத் தெரிவித்துள்ளார்.

Award rajinikanth tamil cinema
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe