'வேட்பாளர்களாக நினைத்து பணியாற்ற வேண்டும்' - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்    

'Think and work as candidates' - Edappadi Palanisamy request

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமானபேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

2021 சட்டமன்றத்தேர்தலில், அதிமுக சார்பில்போட்டியிட விருப்ப மனு அளித்த நபர்களிடம் இன்று (04.03.2021) அதிமுக தலைமை நேர்காணல் நடத்துகிறது. மொத்தம் 7,967 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஒரே நாளில் அனைவருக்கும் நேர்காணல் நடத்தி முடிக்க இருக்கிறது அதிமுக. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 9 பேர் கொண்ட குழு தலைமையில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது.

முதற்கட்டமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு வேட்பாளர் நேர்காணல் முடிந்த நிலையில், தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம். விருப்பமனு அளித்தவர்கள் தங்களை வேட்பாளர்களாக நினைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என நேர்காணலுக்கு வந்தவர்களிடம் அதிமுக இணைஒருங்கிணைப்பாளர்எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

admk edappadi pazhaniswamy tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe