thindivanam farmer well police investigation

Advertisment

திண்டிவனம் அருகில் உள்ளது கீழ் சேவூர் கிராமம். அந்தகிராமத்தில் உள்ள ஒரு விவசாயப் பாசனக் கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக,பிரம்மதேசம் போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அந்த ஆணின் உடலை திண்டிவனம் தீயணைப்புத் துறையின் உதவியோடு கிணற்றிலிருந்து மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்காகஅனுப்பி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், அந்த விவசாயக் கிணறு, சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருடையதுஎன்றும், அவர் கீழ் சேவூர் பகுதியில் விவசாய நிலம் வைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், கிணற்றில் சடலமாக இருந்த அந்த ஆண் யார்?எந்த ஊர்?அவர் இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டாரா?கொலை செய்யப்பட்டுக் கிணற்றில் வீசப்பட்டாரா? எனப் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

மர்மமான முறையில் ஆணுடல் மிதந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.