Advertisment

மர்மமாகச் சுற்றித்திரிந்த மும்பை வாலிபர்: வளைத்துப் பிடித்து கரோனா தனிப்பிரிவுக்கு அனுப்பிவைத்த மக்கள்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஜக்கம்மா பேட்டை பகுதியில் நேற்று ஒரு இளைஞர் கையில் ஒரு பையுடன் மர்மமான முறையில் சுற்றித்திரிந்து உள்ளார். அவரைப் பார்த்த பொதுமக்கள் மிரண்டு போயுள்ளனர். அவரை விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். உடனடியாக ரோஷனை காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

m

இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து அந்த இளைஞரைக் கொண்டுபோய் தீர விசாரித்தனர். அவரது பையில் அவர் உடுத்தும் துணிகள் மற்றும் கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு பகுதிகளில் ரயிலில் சென்ற டிக்கெட் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான ரசீது வைத்திருந்துள்ளார். அவர் மும்பையைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்துள்ளார். எனவே காவல்துறையினர் 108 ஆம்புலன்சை வரவழைத்து அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

அவர் இப்போது கரோனா தனிப்பிரிவு சிகிச்சைபிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலிருந்து ஒரு கரோனா நோயாளி மருத்துவக் குழுவினரின் தவறினால் வெளியே அனுப்பப்பட்டு இன்றுவரை தலைமறைவாகியுள்ளார். அவரைக் கண்டுபிடிக்க 7 தனிப்படை போலீசார் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். இந்தநிலையில் இந்த மும்பை வாலிபரும் மர்மமான முறையில் சுற்றி வந்ததால் இவரால் கரோனா நோய் பரவி விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள்.

thindivanam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe